பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்73


தொழிலாளர்களைப் போல

துன்பமடைந்தாள் ஹலீமா

 

O

 

இங்கே ...

குளிர்காலத்தில்

ஆமைக்கு வேர்க்கிறது

கோடை காலத்தில்

நெருப்புக் கோழிகளுக்கு

சளி பிடித்துக் கொள்கிறது ...

 

O

 

"பருவம் சீராகிற வரை

குழந்தையைப்

பாதுகாத்துக் கொள்"

என்றாள் ஆமினா ...

 

O

 

ஹலீமாவின் மனதிற்குள்

ஆடிப்பெருக்கு

ஆயிரம் குடங்களோடு

அணிவகுத்தது !

 

O

 

அப்போது

முகம்மது அவர்களுக்கு

மூன்றே வயது.