O தாயே - என் சகோதரர்கள் எங்கே? என்றார் ஒருநாள் ... ஹலீமாவின் பிடித்து வைத்த பிரதிகளைத்தான் முகம்மது - சகோதரர்கள் என்று சாற்றினார். O அன்பே! அவர்களெல்லாம் ஆடுமேய்க்கப் போயிருக்கிறார்கள் ... வியர்வையால் விதியை எழுதும் கதிரவன் மேற்குப் படித்துறைகளில் சலங்கைகளை அவிழ்க்கும் சாயங்காலத்தில் அவர்கள் திரும்புவார்கள் என்றாள் ! ஆடு மேய்த்த அண்ணல் O அன்றிலிருந்து ... முகம்மது - ஆடு மேய்ப்பதில் ஆனந்தம் கண்டார் ! |