பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்75


O

 

ஆடு மேய்த்தல்

சொர்க்க வாசிகளின்

சொந்தத் தொழில் !

பூமிக்கு வழிதவறி வந்து விட்ட புதிய

புதிய பிழைப்பு !

 

O

 

ஆடுகள்

நட்சத்திர வெளிச்சத்தில்

நடப்படுகின்ற

காபூல் திராட்சைகள் !

 

O

 

ஆடி அசைகிற

நாச்சியார் கோயில்

மணியினைப் போல ...

மடிகளின் கனத்தால்

கூடார மடிக்கும்

ஆடுகளின் கால்களைப்

பார்க்கிற போதெல்லாம் ...

ஒரு கோடி மார்புகளை

உள்ளங்கைகளால்

தாங்கி விடத் தோன்றும் !

 

O

 

ஆடுகள்

கரித்துண்டு ஆகாமலே

வைரமாகி விடுகிற

தேவதாரு மரங்கள் !