பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்77


பட்டி மண்டபம் நடத்துவதால்

பயன் என்ன ?

 

O

 

ஆதம் நபிமுதல்

அனைத்து நபிகளும்

ஆடுகள் மேய்த்தார்கள்.

ஆமீனா பெற்ற

அருமைச் செல்வரும்

அவ்வாறே செய்தார்கள்.

இதுதான்

ஆண்டவன் கட்டளையோ?

 

O

 

ஆடுகள் மேய்ப்பதால்

இயற்கையினோடு

இரண்டறக் கலந்தார்கள்.

இறைவனின் விருப்பம்

இப்படி ஆனதுவோ?

 

O

 

ஆடு மேய்ப்பவர்

அத்தனை பேரும்

நபிகள் ஆனதில்லை !

நபிகளாய் உயர்ந்தவர்

அத்தனை பேரும்

ஆடுகள் மேய்த்தவரே !