பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்81


O

 

அதிசயக் குழந்தையை

ஆமீனாவிடம்

அழைத்து வந்தனர் ...

 

O

 

சோளக் கொல்லை

பொம்மையாயிருந்து ...

நாயகன் வரவால்

உயிர் பெற்றெழுந்த

ஹலீமா அம்மா,

மீண்டும் இன்று

பொம்மையாய் ஆனாள்!

 

O

 

பொம்மை அழுதது ...

பொழுதெலாம் அழுதது.

இலையுதிர்காலம் பற்றி

இக்பால் எழுதிய

கவிதையாய் ஆனாள்

ஹலீமா அம்மா !

 

O

 

தூக்கம் வருகிற போது

குழந்தைகளின் கைகளிலிருந்து

பொம்மைகள் நழுவி விழுமே

அதுபோல் இலைகள்

மரங்களிலிருந்து

சந்தடி இன்றி

மண்ணில் உதிரும்

என்றான் இக்பால்.