உம்மு அய்மன் என்றவளும் மதீனா நோக்கி நகர்ந்தார்கள்! O திரும்பி மூவரும் வருங்காலை திடுமென ... அப்வாஹ் எனுமிடத்தில் அன்னையர் திலகம் ஆமீனா அல்லாவிடத்தில் அடங்கிவிட்டார் ! முப்பது வயதினில் முடிந்தது அவர் கதை ! O வீணை அறுந்தது ! விடி விளக்கணைந்தது ! வில் முறிந்து போனது ! O விவேக சிந்தாமணி விழுந்துடைந்து போனது ! என்ன எழுத ... இனிநான் எதை எழுத ... வானம் கிழிந்தது ; உடுக்கள் உதறின ! உப்புக்கரித்த க டல் ஒரு கோடிக் கண்களிலே ஓங்கி அடித்தது ; ஓசையின்றி அழுதது ! |