O பாலைவனக் கப்பல்கள் ஈச்ச மரங்களைப் பிடுங்கி மணல் வெளி முழுவதும் இரங்கற் கவிதை இழைத்தன ! மறைந்தாள் ஆமீனா ! O அண்ணல் மீண்டும் அனாதை ஆனார். எத்தனை முறைதான் அநாதை ஆவார் எங்கள் பெருமான் நபிகள் நாதர்? O உம்மு அய்மன் கன்னத்தில் வழிந்த கண்ணீர தனில் உப்பெடுத்துக் கொண்டே ஊர்வந்து சேர்ந்தாள். O முகம்மது அவர்களை பாட்டனார் இடத்தில் பக்குவப்படுத்தினாள் ! O அப்பாமுகத்தைப் பாராமல் அம்மா அன்பினை நேராமல் |