பக்கம் எண் :

86 வலம்புரி ஜான்


எவர் வளர்ப்பார் ஏந்தல் முகம்மதை?

 

O

 

பாட்டனார் முத்தலீஃப்பை

பருவம் -

பதம்பார்க்கத் தொடங்கியது ...

அவரது முதுகு

வானவில்லைப் போல

வளையத் தொடங்கியது ...

 

O

 

தோலின் சுருக்கங்கள்

மலை ஏறுகிறவர்கள்

வெட்டிய படிக்கட்டுகளைப் போல

மதர்த்து நின்றன !

 

O

 

அல்லா என்னை

அழைக்கிறான்.

புறப்படுவதற்கு முன்னர்

அநாதையான முகம்மதுவை

உரியவரிடம் ஒப்படைக்கவேண்டும் !

 

O

 

கவலை கட்டிய

கண்ணீர்க் கூடுகளால்

முத்தலீஃபின்

புருவக் கிளைகள் ...

முறியத் தொடங்கின !