முறுவல் பூத்தார் : எனினும் சொன்னார் - புறப்படு ; போகலாம் என்று சொல்லாமல் சொல்லும் கைகாட்டி மரங்கள் நாம் பெறும் குழந்தைகள் ! இறைவனைச் சுட்டும் இன்பக் கேணிகள் - குழந்தைகள் ! இதுவரை உனக்குக் குழந்தைகள் இல்லை. மனிதக் காலையை பார்க்காத உனக்கு மழலையின் உச்சம் எப்படிப் பிடிபடும்? மன்னிக்க வேண்டும் என்றார் பிதாமகர்! O அடுத்து வந்தார் அப்பாஸ் என்பவர் ... இவர்தம் குழந்தைகளை எண்ணவோ வேறு கைகளைத்தான் விலைக்கு வாங்கவேண்டும். உள்ளது போற்று! உனக்கேன் சங்கடம்? உதறினார் முத்தலீஃப். O அடுத்து வந்தவர் அபுதாலீஃப் ... |