இளைஞரானார் இனியவர் முகம்மது ! O சில இளைஞர்கள் ... பனைமரங்களைவிட உயரமாக வளர்ந்தவர்கள் ; ஆனால் தென்னை மரங்களைவிட கோணல்களாகி விட்டவர்கள் ! O இவர்களின் மத்தியில் நபிகள் நாயகம் ஆலமரமாய் அணிவகுத்தார்கள். சதையில் சமைந்த கேள்விக் குறியில் அடியில் அமைந்த புள்ளியை இழுக்கும் பாம்படம் போல ... அளவாய் அசைந்தார் அண்ணல் பெருமான். O மணலில் படரும் முந்திரிச் செடிபோல் முதல்வனைப் பரவ முந்தி நின்றார்கள் ! O இவர் வயதொத்த இளைஞர் பலரும் |