பக்கம் எண் :

10


கழகத்துக்குத் தன் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கப் போவதாகவும்" நீடூர் நண்பர் ஹாஜி ஏ.எம்.சயீத் பி.ஏ.பி.எல். அவர்கள் எனக்கு எழுதியிருந்தார்.

   இவ்வாறே, சென்னைப் புதுக்கல்லூரிப் பேராசிரியர் ஓ.ஏ.காஜா முஹையித்தீன் எம்.ஏ.அவர்களும் என் இலக்கியப் பணிகளைக் குறித்து ஆய்வு நடத்தி சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப் போவதாகவும் புதுக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சா. அமீது எம். ஏ., அவர்களும் தெரிவித்தார்.

   இத்துணையும் இக்காப்பியத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் எனக்கு ஏற்படுத்தியது, எழுதத் தொடங்கினேன். என் உடல் நிலை ஏதும் செய்ய முடியாத-சிந்திக்க முடியாத அளவுக்குப் பாதித்தது."அதை எழுதி முடிக்க இறைவன் விரும்பவில்லையோ?" என்று கூட நினைத்து விட்டேன்.

   என் உடல் நிலையை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்வதற்காக ஈரோட்டின் டாக்டர் அமானுல்லா அவர்களின் "நாஸிர் நர்சிங் ஹோமை"நாடிச் சென்றேன்.அவர்தான் என் போன்ற சமுதாய ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் பணியைக் கடமையுணர்வோடு மகிழ்ச்சியாகச் செய்பவர்.  

   பேசத்தெரியாத பச்சிளங் குழந்தைகளுக்கும், அவர்களின் பார்வையினால்-செய்கையினால்-அசைவுகளினாலேயே நோயைக் கண்டுபிடிக்கும் கல்வியில் (D.C.H.)தேர்ந்த அந்த டாக்டரிடம் என் உடலை மட்டும் காட்டவில்லை; என் உள்ளத்தையும் திறந்து