பக்கம் எண் :

11


காட்டினேன். அதாவது நான் மேற்கொண்டிருக்கும் இரண்டாம் பாகத்துப் பணியையும் சொன்னேன். அவர் பூரித்துப் போனார்.

   "ஒருவாரத்தில் உங்களின் உடல் நலம் பெற்றுவிடும், என் வீட்டிலேயே தங்கியிருந்து இந்தக் காப்பியத்தை எழுதி முடியுங்கள்." என்று கூறித் தம் பங்களாவிலேயே என்னைத் தங்க வைத்து, எனக்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக ஒரு பணியாளரையும் இருக்க வைத்தார் டாக்டர் ஹாஜி அமானுல்லா அவர்கள். அவரது பங்களாவில் வைத்தே இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்தேன். முந்தைய பதிப்புக்கள் 43 இயல்களில் முடிந்திருந்தன; இப்போது இரண்டாம் பாகத்தோடு 66 இயல்களாகி இருக்கின்றன.

   இவர்களுக்கெல்லாம் என் நன்றியை எப்படித் தெரிவிப்பது? இக்காப்பியம் இருக்கு மட்டும் அவர்களையும் இத்துடன் வாழவைக்க வேண்டும். இதனாலேயே இரண்டாம் பாகத்தை எழுதி முடித்த கதையை சிறிது விரிவாகவே எழுதும்படியாயிற்று.

   முதல் பாகத்தை எழுதி 25 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் பாகத்தை எழுதி இருக்கிறேன். கால் நூற்றாண்டு இடைவெளியினால் ஏற்பட்ட மாற்றம் நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். அது ஏற்றமான மாற்றமா? இறக்கமான மாற்றமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களே நீங்கள் தான்.

   முந்தைய பதிப்புக்களில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள், பெரியோர்களின் சிறப்புரைகள் சில இதில் இடம்பெற முடியாதபடி இறுதிநேர இடநெருக்கடி ஏற்பட்டுவிட்டது. சாற்றுக்கவிகளிரண்டை