குறைத்து வெளியிட வேண்டியதுமாயிற்று. முந்தைய பதிப்புக்களில் இடம் பெறாத பேராசிரியர் அ.சீனிவாச ராகவனாரின் அருமையான கவியும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் பாராட்டுக் கடிதமும், மறுமலர்ச்சி ஆசிரிய நண்பர் ஏ. எம். யூசுப் அவர்களின் ரேடியோ விமர்சனமும் இதில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படிப்பினை மிகுந்த இந்த அழகான வரலாற்றில் என் கைபட்டதால் ஒரு சிறு கீறல் எங்கேனும் விழுந்திருந்தால் அது என் அறியாமையினாலோ, அவசரத்தினாலோ ஏற்பட்டு விட்டதாகக் கருதி என்னை மன்னிப்பதோடு எனக்கும் அதைத் தெரிவியுங்கள், திருத்திக் கொள்கிறேன். இதில் ஏதேனும் சிறப்புக் கண்டால் அது இறைவனே கூறும் இவ்வரலாற்றின் சிறப்பாகக் கொள்ளுங்கள்; திருப்தியடைகிறேன். இதனை இயற்றி முடிக்கும் பேற்றினையும் வாய்ப்பினையும் எனக்கருளிய இறைவன், எனது ஏனைய நோக்கங்களையும் நிறைவேற்றும் அளவுக்கு எனக்குப் பேருதவிபுரியப் பிரார்த்தியுங்கள்; எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அனைவருக்கும் பேரருள் புரிய நானும் அவனிடம் பிரார்த்திக்கின்றேன். கூத்தாநல்லூர், 20-10-80 | சாரணபாஸ்கரன். | |