கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாரின் ஆசிரியர் வேதாந்த வரகவி ஸாது ஆத்தனார் அவர்கள் அளித்த சிறப்புப் பாயிரம் சாரணரின் பாஸ்கரனாம் திருச்சுழியார் அஹ்மதுக்குத் தமிழின் செல்வப் பூரணியும் புங்கவியும் வாழ்ந்திருக்க அவன்நாவில் புனிதங் கூறக் காரணமும் விற்பனமும் அற்புதமும் கற்பனையும் கதித்து மேவித் தோரணமாய் யாப்பிசைக்கச் சித்திரகவி வரம்பெற்றுத் துதிகாள் வானே! நற்றவத்தின் சிரேட்டமெலாம் ஒருங்கமைந்த பெரியாரின் நனிசீர் வாய்மை முற்றுமெழில் தன்னகத்தே மதிசுரப்ப அமிர்தவெள்ளம் முழுதும் தேக்கிக் குற்றமறுங் கற்பியலாம் யூசுப் எழில் சுலைகாவும் கூடி வாழ்ந்த அற்புதத்தின் சரிதையினை அகப்படுத்தி வகைப்படுத்தி அறைந்திட் டானால். முன்னூலாம், முதனூலின் யாப்பியலை வழியுணர்ந்து முழுதும் தேர்ந்துது நன்னூலின் சாங்கியத்தைச் சூத்திரமாய்ச் சுருக்கிவிட்டான் நவைதீர் மிக்கோன் பன்னூலின் பாவாணன், யூசுப்எழில் சுலைகாவும் பக்தி பூண்ட இன்னூலின் சங்கற்பம் சாரணரின் பாஸ்கரனாம் இயற்றி னானே! நாவகத்தும் பூவகத்தும் வீற்றிருந்த பாமாது நாவில் வல்ல பாவல்லோர் நாவல்லோர் பாசுரத்தின் கவிவல்லோர் பாங்கில் நின்றாள். தேவகத்தின் பொற்கவிதை செந்தமிழில் யூசுப்எழில் சுலைகா வும்தேர் மாவகத்தின் தண்டமிழான் சாரணரின பாஸ்கரனாம் மகிழ்ந்திட் டானே! |