பக்கம் எண் :

14


கலைக்களஞ்சிய ஆசிரியர்

 மு. றா. மு. அப்துற் றஹீம் அவர்கள்

 அன்புடன் அளித்தது.

 

அழகாம் சரிதம் என அல்லாஹ்            

அழகாய் உரைத்ததை அழகாக்கி       

அழகாம் பாணியில் ஆக்குவித்த         

அழகர் யூசுப் திருச்சரிதம்       

அழகுக் கழகாய் அணிசெய்து            

அழகே உருவாம் தமிழ்மொழியை

அழகு செய்யும் அழகுதனை             

அழகாய்க் கூறல் அரிதம்ம!

 

கவிதா நயமும் கற்பனை நயமும்           

கவினுறு உவமை அணிநயமும்    

சவியுறு உருவக எழில்நயமும்             

தமிழுள தமிழாம் மொழிநயமும்        

புவியுளோர் போற்றும் பண்ணயமும்       

பாக்கள் இடைநிறை பன்னயமும்  

நவில எம்மோர் நாநயத்தால்            

இயலா தியலா தியலாதே.        

சொன்னயப் பொலிவும் பொருட்செறிவும்    

சொலித்து மிளிரும் அருள்வாக்கும்

நன்னயம் இணைந்த இசைஒலியும்          

நடையின் மிடுக்கும் பெருமிதமும்   

கன்னற் பாகோ கனிரசமோ               

கற்கண் டாமோ எனவெண்ணி      

உண்ண உண்ண எம்நாவும்              

உணர்வும் உளமும் இனித்தனவே.