பக்கம் எண் :

103


மீண்டும் கவிஞன் விளக்கிட எழுந்து

நீண்டவெண் தாடியை நெருடிய படியே

சுற்றிலும் அவையை உற்று நோக்கினான்.

கொற்றவர், அமைச்சர், குடிகளின் தலைவர்

அனைவரும் அமைதியாய் அமர்ந்திடக் கண்டு

கனைத்த படியே கவிஞன் கூறினான்.

"கனவினில் தோன்றிக் கருத்தைக் கவர்ந்து

மனத்தினில் நிறைந்து கணத்தினில் மறைந்த

வடிவழ கனுக்கு வாழ்வையே இழக்கத்

துடிதுடிக் கின்ற சுலைகா நிலையை

முற்றிலும் மறந்து முடிவே தேர்தல்

சற்றும் பயனே தராது, அறிவீர்!

அறிவும் நாட்டை ஆளும் திறமையும்

உரியவ ரிடத்தே ஒப்படைத் திடவே

முடிவே செய்வது முற்றிலும் தவறாய்

முடியும், சுலைகா முற்றிலும் மறுப்பாள்!

அறிஞனோ அல்லவோ, அரசனோ ஆண்டியோ

வறியனோ செல்வனோ வந்தவன் யாவனோ?

அவனையே சுலைகா அடைந்திட விரும்புவார்

புவனமே பணிந்திடும் பூபதி வேண்டினும்

அவனையே அன்றிவே றெவனையும் கொடுத்திடில்

தன்னையே அழிக்கவும் தயங்கிடார்!’! எனக்கவி

சொன்னதும் வேந்தரோ சோர்வுடன் கூறுவார்.

"காதலின் தத்துவம் காட்டிய கவிஞரே!

காதலை இழப்பவர் சாதலை வரிப்பது