பக்கம் எண் :

104


உண்மையே என்பதை ஒப்புவேன்! என்மகள்

நன்மையே பெரிதென நாடுவேன்; ஆதலின்

கனவினில் தோன்றிய கட்டழ கன்எவன்

என்பதை அறிவது எப்படி என்பது

புரிந்திட விலைஅது புரிந்திடில் கூறுவீர்

அறிந்ததும் அதன்படி ஆவன செய்கிறேன்."

மன்னவர் உரைத்ததும் மந்திரி எழுந்தே

"என்னுடைக் கருத்தையும் இயம்பிடக் கேளீர்!"

என்றனர், அரசரும் "இயம்புக" என்றனர்

"நன்றாய்ச் சொல்லுக" என்றார் புலவரும்

"கற்பனைப் புரியினில், காவியப் பொழிலினில்

அற்புதம் கண்டிடும் அருட்கவி வாணரின்

சொற்றிறன் கேட்டபின் சுலைகா வாழ்க்கையில்

பற்றிய கொடுந்துயர் பரிதிமுன் பனியென

விரைவினில் விலக்கிடும் வழிகளை விளக்கமாய்

உரைத்திடு வாரென உண்மையில் நம்பினேன்."

"காதலின் விளைவினைக் கவிச்சுவை ததும்பிடப்

போதனை புரிந்தநம் புலவரோ கனவினில்

வந்தவன் கிடைத்திடும் மார்க்கமே உரைத்திலர்

மந்திரம் ஏவினும் தந்திரம் செய்யினும்

கனவில்வந் தவனையே கண்டிடக் கூடுமோ?

நினைவினில் எவனையோ நிறுத்திப் பார்த்திடில்

அவனையே மற்றவர் அறிந்திட லாகுமோ?

கவனமாய் ஆய்ந்திடில் கடிதினில் அரசியின்

துயரினைக் களைந்திடத் துணைவரைத் தேர்ந்திட

முயலுவோம்! அதையவர் முற்றிலும் மறுத்திடில்