"எல்லாம் உண்மை சுலைகாவே எழுந்து வாராய் விரைவாகச் சொல்லாற் காலம் கடத்தாதே துன்ப வாழ்வே நடத்தாதே. வல்லார் உன்னை வரித்தேக வந்தே யுள்ளார்; உன்துயரம் எல்லாம் விலகும் கனவீந்த எழிலன் காட்டவா" என்றார். எத்தனை நாளாய் அவனுக்காய் ஏங்கி ஏங்கி அழுதேன்யான் இத்தனை காலம் எங்கேதான் என்னை மறந்து இருந்தாராம். அத்தனை பாவம் புரிந்தேனோ அறியாச் சிறுவன் அவன்தானோ? பித்தனை ஏதும் கேட்டீரோ!’; பிதற்ற லானாள் சுலைகாவே. "யாவும் கேட்டோம் அவனேதான் யாதும் கூறேன்; அத்தனையும் தேவி சுலைகா திருச்சமூகம் செப்பத் தவறேன்" என்கின்றான். பாவி அவனோ உனைக்காணப் பதறுகின்றான் வாராய்நீ! யாவும் அவனை நீயேகேள், யாரும் தடுக்கார்!’ எனச்சொன்னார். யாவும் அவனை நீயேகேள் "அவனைக் காண ஈராண்டாய் அழுது கண்ணீர் வடித்தேனே இவளைக் காண அவனின்றே ஏங்கிக் கண்கள் பூக்கட்டும |