அவனுக் காக விரைவாக அங்கே வாரேன்!" எனச்சொல்லிக் கவலை மறந்து சுலைகாவே கட்டிலில் மீண்டும் அமர்ந்தாளே! "இப்படி நீயே இருந்தாயேல் இங்கே வந்தவன் திரும்பிடுவான். அப்படி அவனே சென்றானேல் அப்பால் கிடைக்க மாட்டானே!" இப்படிச் சொன்னார் தைமூஸே எழுந்து விரைந்தாள் சுலைகாவே. "எப்படி அவரிடம் பேசிடுவேன்?" என்றொரு தோழியை வினவினளே "குலைந்த கூந்தல்; அழுதவிழி கூம்பிச் சுருங்கிய கிழமுகமும் கலைந்த ஆடை அணியாவும் கண்டால் அவனே நகைக்கானோ? விளைந்த இன்பம் அரைநொடியில் வீணாய் முடியும், அத்தனையும் களைந்து புதிதாய் அணிந்தேநீ கடிதில் வருவாய்!" எனச்சொன்னாள். உணர்வு கலங்கி மனங்குழம்பி ஒன்றும் ஏற்கா சுலைகாவைக் கணத்தில் காதலன் நினைப்பூட்டிக் கருத்தை மாற்றிய தைமூஸின் மனத்தில் இன்பம் பொங்கிடவே மகளைத் தோழியர் பால்விட்டுக் "குணத்திற் கேற்ப உடைமாற்றிக் கூட்டி வருவீர்!" எனச்சொன்றார். |