பக்கம் எண் :

128


நீங்கியுயிர் வாழ்ந்துதுயர் தாங்கியதும் போதுமே

     நெஞ்சம் இரங்கி வருவீர்!

     நினைக்கவும் கூடாத கொடுந்துன்பம் சூழ்வதை

     நீக்கஎனை நோக்கி வருவீர்!

ஏங்கியது போதுமினி இயலாது, இயலாது,

     இன்பம் சுரக்க வருவீர்!

     இரவுபக லாய்உமைத் தேடியே வாடிடும்

     என்னருகில் வர வேண்டுமே!

- - x - -