பக்கம் எண் :

136


மணியேஎன எனையேமிக மதித்தாரவ மதித்தே

தணியாக்கொடும் பிணியேஎனத் தனியாக்கிய நிலையே

அநியாயமி தநியாயமி தநியாயமே அலவோ,

கனிவாகிய அருள்கூர்ந்தெனைக் கரைசேர்த்திடு மிறையே ?

 

கொடையாளரின் குணத்தால் மனங் குலையார்நகை முகத்தால்

படையாளரின் பலத்தாலரும் பணியாளரின் துணையால்,

தடையேஎதும் கிடையாதெனும் தந்தைபெரும் தயவால்

அடையாநல மடையவுனை அடைந்தேன்என திறையே!

 

உருவாகிய வாழ்வின்நிழல் ஒளியாகிய கனவில்

தருவாகிய பெருவேட்கையில் தருவாயருங் கனியே

மறுவாகிய துயரேகிட மறந்தார்வர அரு ள்வாய்

தருவாய்கொடுஞ் சாவாகிலும் திருவாகிய இறையே!

- - x - -