ஏற்றமிகும் வேந்தனென உன்னழகுக் கென்னகத்தை ஈந்து விட்டேன்; மாற்றமுறும் வெறுங்கனவாய் மற்றவர்கள் பரிகசித்தும் மறந்தே னில்லை. போற்றுகின்ற மன்னர்பலர் ஏற்றிடவே வந்தார்கள்; புறக்க ணித்தேன், ஆற்றல்மிகும் என்னரசே, அநியாயம் செய்தென்னை அழித்தி டாதே! பெற்றவரே என்றாலும் மற்றவர்க்கு உரித்தான பெண்ணைப் பூட்டி குற்றுயிராய் வதைத்திடவே கொண்டவரே சகிப்பரோ? கொடுமை தாங்கும் கொற்றவரே! பிறர்எனையே இழிவுசெய்தால் நின்பெருமை குன்றி டாதோ? உற்றவராய் இருந்தாலும் துணைவியினைச் சிறைப்படுத்த ஒப்ப லாமோ? எண்ணற்ற இரவுபகல் நின்வருகை எதிர்நோக்கி ஏங்கி ஏங்கிக் கண்ணற்ற குருடர்விழிக் கழுவதுபோல் உனைத்தேடிக் கண்ணீர் விட்டேன்! அன்பற்ற அழகினிலே அளவற்ற இச்சையுற்றால் அல்லல் வாழ்வைப் பின்பற்ற நேருமென முன்புயான் அறிந்தாலிப் பிழையே செய்யேன்! கள்ளநட்புக் கொண்டவனாய் நள்ளிரவில் வந்தவுனைக் கலந்து பேசி உள்ளநிலை அறியாமல் வெளியழகில் மயங்கிவிட்ட ஒருகுற் றத்தால் |