பக்கம் எண் :

147


தீண்டும்படிச் செய்யீர்!" எனச்

     சீறிவிழுந் தப்பால்

தாண்டித்திரை மாட்டிக்கடை

     சாத்தினனே மாலிக்!

 

நின்றோர்மனம் மிக நொந்திட

     நெடுமூச்செ றிந் தப்பாற்

சென்றார், பலர் புதிதாகவே

     திரண் டேதுயர் கொண்டார் !

ஒன்றாயவர் மாலிக்கிடம்

     "உங்கள் மகன் அழகை

நன்றாய்ப்பலர் பார்த்ததுபோல்

     நாம்காணவும் செய்வீர் !"

 

என்றேங்கியே நின்றோரிடம்,

     "எழிலாகிய அவனை

நன்றாகவே காண்பதெனில்

     நால்வர் இரு ழு திரஹம்

குன்றாமலே தந்தீரெனில்

     குறைபோக்கிடக் கூடும்"

என்றார், "இதுநன்றே" என

     இருப்போ ரிசைந்தனரே !

 

கூட்டம்கலைத் திடவே அவர்

     கூறியதற் கொப்பக்

கேட்டவுடன் மாலிக்மனம்

     கிட்டாப் பெருஞ்செல்வம்

காட்டின்நடுக் கிணற்றில் இறை

     காட்டியதாய் எண்ணி

நீட்டும்பணம் பெற்றுத்தடை

     நீக்கிப்பலர் விட்டார் !  

 

ழு திரஹம் -அரபு நாட்டின் நாணயப் பெயர்.