பக்கம் எண் :

153


பாவலர் இசைக்கச் சுலைகாவைத் தங்கப்

      பல்லக்கி லேற்றிய தைமூஸ்

ஏவலர் சிலரும், தோழியர் பலரும்

      எண்ணிலா இரத்தினப் பொதியும்

காவலர் சூழக் காணிக்கை யாக்கிக்

      கவனமாய் ‘மிசுரி’னைச் சேர்க்க

ஏவினர்! முரசு ஒலித்தது; சுலைகா

      ஏற்றனள் காதல் யாத்திரையே!

- - x - -