"தூங்கிடில் களைப்பு நீங்கிடு"மென்றார். தோழியர் சுலைகாவைக் கரத்தில் தாங்கியே இல்லம் நுழைந்தனர். அமைச்சர் தனிமையில் தவித்திட லானார். மயக்கமே தெளிந்த சுலைகாவின் விழிகள் மருண்டன. நினைப்பதைச் சொல்லத் தயக்கமே கொள்ளும் நாவினைக் கடித்துத் தாதியைத் தழுவியே அழுதாள். வியக்கவே நிற்கும் தோழியை நோக்கி, "விரும்பிய திவரிலை" என்றே இயக்கமே இழந்து சிலையெனச் சாய்ந்தாள் ஏங்கின பாங்கியர் இதயம்! |