கீழக்கரை ஸத(க்) க(த்)துன், ஜாரியா, மத்ரஸா அல் மத்ர ஸதுல்’ ஜாமிஆ முதலிய கல்வி நிலையங்களின் ஸ்தாபகர், சென்னை தர்பியத்துல் அத்பால் தர்ம சங்கத்தின் நிர்வாக ஸ்தாபகரும் மதுரைத் தமிழ்ச்சங்க நிர்வாக சபை வித்வானுமாக விளங்கிய ஹாபிலுல் குர் ஆன்- மௌலவி சய்யிது முகம்மது ஆலிம் புலவர் அவர்கள் அருளிய சாற்றுக் கவி (கட்டளைக் கலிப்பா) உலகம் யாவையும் மொன்றெனத் தோன்றிடா தொளிரு மாறரு ளோர்தனி மாமுதல் அலகில் சீரமை ஆரண மீதழ கான மாக்கதை யார்நபி யூசுபு நலவு சால்சுலை காமண மீற்றுற நற்ற மிழ்த்தொடர் பான்மிக நல்கினன் இலக நுண்பொருள் சாரண பாஸ்கர இளவல் அஹ்மது கூத்தநல் லூரனே. வேத மெய்ப்பொருள் வேறு படாமலே விளங்கச் செந்தமிழ் செய்யுட்கி சைந்தவா றோத மோனைதொ டையடி யாவுமே ஒருங்க மைத்துள முள்ளக்கு னித்திடும் காத லின்பங்க னிந்தும லர்ந்த தாய்க் கவின வோர்தலைக் கைக்கிளை யாகவே மாத வர்மனை வாழ்வினர்க் கின்பமாய் வாய்த்த தேயிதின் மாண்பொருள் வாய்மையே! |