பக்கம் எண் :

17


சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

  மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள்

மூன்றாம் பதிப்பிற்கு வழங்கிய

அணிந்துரை

இந்தக்  காப்பியம்  காதற்  காப்பியமே  என்றாலும்  இது  ஒரு  கற்பனைக் காப்பியம் அன்று. யூசுப்-சுலைகா என்ற இருவரையும் பற்றி, திருக்குர் ஆனும் கூறுகிறது. விவிலியமும் கூறுகிறது. இப்படிக் கூறப்படுவதன் காரணமாக, இது இறைவனே எடுத்துக்கூறும் சரித்திர நிகழ்ச்சியாக அமைந்து, மக்கள் அனைவர்க்கும் படிப்பினைகள் தரும் சரித்திரச் சான்றாகவே ஆகிவிடுகிறது.  

இஸ்லாமிய வரலாற்றின்படி யூசுபும், அவரது தந்தை யாகூபும் நபியாவார்கள். யாகூப் அவர்களின் இளைய தாரமாகிய ராஹிலாவின் வயிற்றில் மகனாகப் பிறந்தவர் யூசுப். அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய ஆணழகர். அவரது அன்னை ராஹிலா சிறிது காலத்திலேயே இறந்து விடுகிறார். தமது ஏனைய புதல்வர்களை விடவும் யூசுபிடம் தனியன்பு கொள்ளுகிறார் யாகூப். இதனால் யாகூப் நபியின் மற்றதாரத்தின் புதல்வர்கள் யூசுபையே தந்தையிடமிருந்து பிரித்துவிடத் திட்டமிட்டு தந்திரமாகத் தங்களுடன் யூசுபை வனத்திற்கு அழைத்துச் சென்று, பாழடைந்த ஆழ்கிணற்றில் தள்ளிவிட்டு, யூசுபை ஓநாய் அடித்துத் தின்றுவிட்டதாகத் தந்தையிடம் பொய்யுரைக்கின்றனர்.

கிணற்றிலே  தள்ளப்பட்ட  யூசுப்,  அவ்வழியே  சென்று கொண்டிருந்த வணிகர்களால் மீட்கப்படுகிறார். அவரது அழகைக் கண்டு அதிசயித்து நின்ற வணிகர்களால் யூசுபை என்ன செய்வதென்றே தெரியாமல், அவரையும் வியாபாரப் பொருளாக்கி, அக்கூட்டத்தின் தலைவரான மாலிக்கினிடமே விற்று விடுகின்றனர்.

மன்னர் தைமூஸின் திருமகள் சுலைகா, அழகுப் பெட்டகமாய் வளர்ந்து வருகிறாள். ஒரு நாள் அவள் ஒரு ஆணழ கனைக் கனவிலே கண்டு அவனிடம்