பக்கம் எண் :

160


அரும்பாமலர் கொய்யேன், எனை

      அழைத்தால்வரு கின்றேன்.

விரும்பாவிடில் நெருங்கேன் எதும்

      வேண்டில்தரு கின்றேன்.

கரும்பாகிய மொழிபேசியே

      களிப்போடிருந் திடுவாய்!

ஒருபாபமும் அறியேன்!" என

      உரைத்தார்முதல் அமைச்சர்!

விதியை வேண்டல்:

 

"முன்பேஒரு வரையேமனம்

      முற்றும் வரித்திடவே

பின்பேபிறி தொருவர்கரம்

      பிடிக்கும்படிக் கனவால்

பெண்பேதையை ஏமாற்றிடும்

      பிழையாற்றிய விதியே!

கண்பார்த்திடு இனியாகிலும்

      கற்பாயினுங் காப்பாய்!"

 

 

இறையை வேண்டல் :

 

காதல்தரும் நாதன்பெறக்

      கருணைமறுத் திடினும்,

சாதல்அளித் தனையோ? அதைத்

      தரவும்மறுத் தனையே!

பாதம்பணி கின்றேன்எனைப்

      படைத்தஇறை யோனே!

காதல்அழித் தனையாயினும்

      கற்பாயினுங் காப்பாய்!"