பக்கம் எண் :

161


என்றேஅழும் சுலைகாமன

      இருள்போக்கிடும் ஒளியாய்

"ஒன்றேஉரைக் கின்றேன்மிக

      உறுதியுடன் வாழ்வாய்!

என்றாகிலும் நின்நாயகன்

      இங்கேவரல் திண்ணம்

குன்றாதுயர் கற்பே"எனக்

      கூறியது நெஞ்சே!  

- - x - -