பக்கம் எண் :

163


திங்களைச் சாடுதல் :

"முகிலையே முத்த மிட்டு

      முறுவல்செய் மதியே! இந்த

அகிலமே காண வல்ல

      அழகொளி பெற்ற நீயென்

மகிபரைக் கண்ட துண்டோ?

      வாழ்ந்திடும் இடமும் எங்கோ?

தகித்திடும் ஆசைத் தீயைத்

      தணித்திடச் சொல்லு வாயே!"

 

"வேட்கையின் வெப்பம் தீர்க்க

      வேண்டினால் ஆசைத் தீயை

மூட்டிவிட் டெனது நெஞ்சை

      முன்னின்று கொதிக்கச் செய்து

வாட்டிடும் மதிய மேஎன்

      வேதனை வளர்க்க வேண்டாம்.

நாட்டினில் காட்டில் என்றன்

      நாதனைப் பார்த்த துண்டோ?"

 

"பெண்களின் ஒளிமுகத்தின்

      பெருமையைக் கூற நாடும்

கண்களின் உவமை யாகும்

      கலைமதி நீயே, என்றன்

புண்களைக் கிளற வேண்டாம்;

      பொறுமையும் அழிக்க வேண்டாம்.

உன்னெழில் அழிந்து தேய்ந்து

      ஒழிந்திடும், என்போ லாவாய்!"

 

"என்னுயிர்க் காதலர்க்கு

      யான்படும் துன்பம் சொல்ல

உன்மனம் ஒப்பா தென்ன

      உனக்கெதும் பிழைசெய் தேனோ?