பக்கம் எண் :

165


"கானகம் சென்றி ருப்பீர் :

      கடல்மலை கண்டி ருப்பீர்;

வானகம் முழுதும் சுற்றி

      வையகம் அளந்தி ருப்பீர் ;

யானகம் நொந்து தேடும்

      ஏந்தலைக் கண்ட துண்டோ?

தேனமு துண்ணும் புட்காள்

      தெரிந்ததைச் சொல்லு வீரே!"

 

கெஞ்சிடும் சுலைகா துன்பம்

      கேட்டதும் பெடையைக் கூடிக்

கொஞ்சிடும் புட்கள் உள்ளம்

      குமுறிடப் ‘பெண்மை அன்பில்

நஞ்சிடும் ஆண்மை’ குற்றம்

      நவின்றது பெடையே ஒன்று,

"துஞ்சிடும் புட்காள்! என்றன்

      துணைவருக் குரைப்பீர்!" என்றாள்.

 

ஏங்கிடும் சுலைகா வார்த்தை

      ஏற்றது போன்று புட்கள்

மாங்கிளை ‘சலசல’க்க

      வான்வெளி பறந்து செல்ல

வீங்கிடும் விழியி லின்பம்

      விளைந்திடச் சுலைகா நோக்கப்

பூங்கொடி மகிழ்ந்து ஆடப்

      புகுந்தது கூதிர்க் காற்றே!

 

காற்றை ஏவுதல் :

தன்னுடை விலக்கி மெல்லத்

      தழுவிட முயலும் காற்றை

மின்னிடை சுலைகா தள்ளி

     மேலுடை சரிப்படுத்திக்