பக்கம் எண் :

171


"பொன்பத்து ஆயிரமே தருகின்றேன்!"

     என்றொருவர் புகலக் கேட்டு

     "வெண்முத்து இருமரக்கால் தருகின்றேன்"

       எனமற்றோர் விளம்ப லானார்.

     "கண்பொத்தித் திறந்திடுமுன் இவையிரண்டும்

           சேர்த்தளிப்பேன் கைமேல்!" என்று

பொன்பத்து ஆயிரமும் வெண்முத்துப்

         பையிரண்டும் ஒருவர் போட்டார்!

 

    வாங்குபவர் போட்டியினால் விற்பவரின்

         பைநிறைக்கும் வாய்ப்பைத் தூண்டி

     ஓங்குகின்ற பெருவணிகர் குலத்தலைவன்

   மாலிக்கு, உரத்து மீண்டும்

     "வாங்குபவர் மேலும்விலை கேளுங்கள்!"

    என்றிடவே வழிவி லக்கி

        ஆங்குவந்த ஒருகனவான் "அவனெடைக்கு

             எடை,புனுகு அளிப்பேன்!" என்றார்.

 

            தலைநிமிர்ந்து இன்னொருவர் "இவனெடைக்குப்

        பசுந்தங்கம் தருவேன்!" என்று

     விலையுயர்த்திக் கேட்டிடவே மற்றவர்கள்

       வியந்திடவே மீண்டும் மாலிக்

       "கலையுணர்ந்த அழகன்தனை அடிமைபெறும்

         பாக்கியத்தைக் கருத்தில் கொண்டு

        நிலையுணர்ந்து மேலும்விலை கேட்டிடுவீர்!"

    எனமுழக்கி நிற்க லானான்!

 

     பாய்ந்துவரும் புரவியினில் முதலமைச்சர்

      அஜீஸுவரப் பார்த்து, மற்றோர்

     சாய்ந்தொதுங்கி இடமளிக்கச் சிரம்வணங்கி

மாலிக்கு ‘சலாமே’கூற,