மாலிக் கூறுதல் "தலைமிகுந்த பேரமைச்சே இவனெடைக்குப் பலர்தங்கம் தருவோ மென்றார். தொகைமிகுந்த தென்றாலும் தாங்களெனை அழைத்ததனால் துடித்து வந்தேன். நகைசொரியும் இவனுக்கெவர் அதிகவிலை நல்குவரோ அவருக் கீவேன். தொகைமதிப்பைப் பொறுத்ததிது!" எனமாலிக் துணிவாகச் சொல்ல லானான். "முன்புரைத்த விலைகளிலே அதிகம்தர வேண்டுமென மொழிதல் கேட்டுப் பின்புரைத்த பெருவிலைக்கு இருமடங்கு யான்தருவேன் பெரியீர்!" என்றார். "நன்றுஇது போது," மென நவின்றிட்ட மாலிக்கை நன்றி பொங்க "நின்றிருப்பீர் சிறுநேரம்" எனக்கூறித் தங்கத்தை நிறுக்க லானார். வந்திருந்த அனைவருடன் ஆங்கிருந்த மற்றவரும் வியந்து நிற்கச் சுந்தரனை ஒருதட்டில் வைத்துப்பொன் மறுதட்டில் சுலைகா கொட்டச் சிந்தையினுள் மகிழ்வுற்ற மாலிக்கு கேட்டபடித் தங்கம் பெற்று வந்தவழி சகாக்களுடன் சென்றிடவே மன்னரவை அமைச்சர் சென்றார்! தன்னருகில் நிற்கின்ற எழிலனுடன் பேசிடவே சுலைகா உள்ளம் எண்ணுவதை ஏற்றாலும், நாணமவள் செவ்விதழை இறுக்கிப் பொத்தப் |