பக்கம் எண் :

19


மிசுரு  நாட்டின்  முதலமைச்சரான  அஜீஸுக்கு  இத்தகவலை  அனுப்பி,  தன்  அழகுத் திருமகளை மணந்து கொள்ள தன்னாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்  மன்னர்  தைமூஸ்.  மன்னரின் விருப்பத்தை அஜீஸால் மறுக்க முடியவில்லை. மணப்பதற்குச் சம்மதந்தான். ஆனால் என் நாட்டிலிருக்கும் கடமையின் காரணமாக அங்கு வர முடியவில்லை என்றும், திருமணத்தை முடித்துப் பெண்ணை அனுப்பிவைத்தால்  தான்ஏற்றுக்   கொள்வதாகவும்  அஜீஸ்   கூறிவிடுகிறார்.   இதன்படியே   சுலைகாவின்   திருமணச்      சடங்குகளைத் தன்நாட்டிலேயே முடித்து, மகளைக் கணவனின் நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார் தைமூஸ். ஆனால், தன்னை மணந்து கொண்ட மிசுரின் முதலமைச்சர் ஆஜீஸ், தனது கனவில் தோன்றிய ஆணழகரல்லர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள் சுலைகா. அவளது ஏமாற்றத்தை அறிந்து அவளது உணர்ச்சியை மதித்து ஒதுங்கிவாழ்கிறார் அஜீஸ்.  தன்  கனவுக்காதலனல்லாமல்,  காற்றும்  தன்னைத் தீண்டக்கூடாதென்று வாழ்கிறாள் சுலைகா. அவள் விருப்பப்படியே வாழ்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து தருகிறார் அமைச்சர் அஜீஸ்.

      அழகர் யூசுபை கிணற்றிலிருந்து மீட்டு, அடிமை கொண்ட வணிகர், தம் பொருள்களை   விற்கவும்,   புதிய   பொருள்களை   வாங்கவும்  பல  நாடு  நகரங்களைக்  கடந்து இறுதியில் மிசுருக்கே வருகின்றனர். அவரது அழகைக் காணுவதற்கு  ஆண்களும்  பெண்களும்  அணியணியாகத்  திரண்டு வந்து, காட்சிப் பொருளைக்  காணுவதற்குக்  கட்டணம்  கொடுப்பது போல,  யூசுபின்  அழகைக்  கண்டுகளிக்கக்  கட்டணம்  கொடுக்கின்றனர். அவரது  அழகைக்  காணுவதற்கே கூட்டங் கூட்டமாக வரும் மக்களிடையே, அவரையே அடிமையாக விற்று அதிகப் பணம் பெற வணிகர் தலைவன் மாலிக் முயற்சி செய்கிறான்.

     யூசுபின் அழகின் சிறப்பு நகரெங்கும் பரவி அஜீஸின் இல்லத்திற்கும் எட்டுகிறது. அவரை அடிமையாகப் பெறு வதையே பெருமையாக நினைத்த அமைச்சர் அஜீஸ்,