ஏலமிடப்பட்ட யூசுபைத் தன் அரண்மனைக்கே கொண்டுவரச் செய்கிறார். அவரது பேரழகைத் தோழிகள் மூலம் அறிந்த சுலைகா அவரைக்கண்டு, அவரேதான் கனவுக்காதலர் என்பதையறிந்து அவர் எடைக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து யூசுபை அடிமையாகப் பெறுகிறாள் சுலைகா. தன்கனவுக் காதலன் தனது அரண்மனைக்கே வந்துவிட்ட பிறகு அவரையடையத் துடிக்கிறாள் சுலைகா. அன்றிரவு அவர் அயர்ந்து தூங்குகிறார். அவளால் தூங்கவே முடியவில்லை. பின்னிரவு அவள் யூசுபை நெருங்குகிறாள். அவளது அருமைத் தோழியும் அவளறியாமலேயே இருளிலே மறைந்து மறைந்து பின் தொடருகிறாள். இளவரசியின் எண்ணம் அந்தத் தோழிக்குப் புரிந்துவிடுகிறது. பெண்மைக்கே பெருமை தரும் அவளது கற்பைப் பாதுகாக்கவே தோழி தொடர்ந்து கண்காணிக்கிறாள். "எலிபிடிக்கப் பதுங்குகின்ற பூனை போன்று இருளிடுக்கில் பதுங்கிநின்ற தோழி நெஞ்சில் கிலிபிடிக்க இளவரசி கரம் பிடித்துக் கீர்த்திமிகும் பெண்ணுடைமை யாகும் கற்பைப் பலிகொடுக்கத் துணிந்த செயல் தடுத்து..." நிற்கிறாள்,‘அடிமையின் அழகிலே மனமே வைத்து அரசகுலப் பெருமைக்கே அழிவு’ தேடவேண்டாமென்று தோழி எடுத்துக் கூறுகிறாள். ‘அடிமையெனக் கருதினையோ? கனவில் தோன்றி அடிமை கொண்ட என்னரசர் இவரேயாவார்.’ என்பதைத் தோழிக்குத் தெரிவிக்கும் சுலைகா;அவரைத் தன்னிடம் அழைத்து வரும்படியும் பணிக்கிறாள்.இந்த அழகரே இளவரசியின் கனவுக்காதலனென்பதையறிந்து மகிழ்ந்த தோழி,அவளது கற்பைக் காக்கும் கடமையில் தவற மறுக்கிறாள். ஒருநாள் யாருமே இல்லாத சமயத்தில் யூசுபைப் பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறாள் சுலைகா. இச்சமயத்தில் அங்கே அஜீஸ் வந்து விடுகிறார். தன்னை யூசுப் |