பக்கம் எண் :

193


அன்புமிகும் பெண்முகத்தைக் காணுதற்கும்

      நாணுகின்ற அழகு மிக்கோய்!

பண்புமிகும் பெண்மையினைப் பாழடித்து

      வலியவந்தும் பதுங்க லாமோ?

உண்மையினில் என்தோழி உரைத்தபடி

      நின்ஆண்மை ஒழிந்த தாமோ?

அண்மையினில் வந்திடுவீர், அன்புடனே

      பேசிடுவீர்! அதுவே போதும்!

 

என்னகத்தின் ஏந்தலரே, எதற்காக  

      அப்பாலே இருக்க வேண்டும்?

பெண்ணகத்தைக் கவருகின்ற ஆண்மையிலை

      எனபதற்கா பீதி கொண்டீர்?

நின்னகத்தில் சிறுஇடமே தந்தாலும்  

      போதுமதில் நிலைத்தி ருப்பேன்!

மண்ணகத்தில் என்சுவனம் உன்னகமே

      என்பதைநீர் மறக்க வேண்டாம்!

 

பொன்னடியை முத்தமிடும் புண்ணியத்தைத்

      தந்தாலும், பொலிவு மிக்கப்

புன்னகையைக் கொண்டெனது வேட்கையினைப்

      போக்கிடினும், புவியி லுன்றன்

பெண்ணடிமை யாக்குவித்து நின்பணியை

      ஏவிடினும் பெருமை கொள்வேன்!

என்துயரைப் போக்கிடுவீர், இரங்கிடுவீர்,

      கடைக்கண்ணால் என்னைக் காப்பீர்!

 

சிந்தையினில் செய்கையினில் இன்றுவரை

      மற்றவரைத் தீண்ட வில்லை!

சொந்தமனை யாளெனவே அமைச்சரஜீஸ்

      என்கரத்தைத் தொட்டதில்லை;