பேதித்த நெஞ்சத்தால் பிழைசெய்ய முனைந்தீரேல் பின்னும் என்பால் வாதித்தல் முறையல்ல வழிவிடுக!" எனயூசுப் வணங்கிக் கேட்டார்! சுலைகா: "வாழ்வுக்கு அழைத்தக்கால் வாராமல் சாவுக்கு வலியச் செல்லும் கீழ்புத்தி படைத்தோரே, ஏதுக்கு நீரிந்தக் கிலிய டைந்தீர்? வாழ்வுக்கு அழைக்கின்றேன் சாவுக்கு அழைத்தீரேல் வருவேன் யானும் தாழ்வுக்கு இலக்காயின் உம்மோடு பலியாகத் தயங்கேன்!" என்றாள். யூசுப்: "பாபத்திற் காளாகி உள்ளத்தைப் பாழாக்கிப் பண்புள் ளோரின் சாபத்திற் குள்ளாகிச் செத்தக்கால் இறையோன்முன் தப்ப லாமோ? கோபத்திற் குரித்தாக்கிக் கொடுநரகின் உணவாக்கும் கொடிய சாவின் ஆபத்தை அறிந்திலையோ! அரசகுலத் திருமகளே அறிவாய்!" என்றார். சுலைகா : "இன்றைக்குச் சுவர்க்கத்தில் மகிழ்ந்திடுவோம். நாளைக்கு இரண்டு பேரும் சென்றிடுவோம் நரகுக்கு அங்கேயும் மனமொத்துச் சேர்ந்தி ருப்போம் |