பக்கம் எண் :

196


ஒன்றித்த காதலர்கள் இருப்பிடமே

      நற்சுவனம்! உமது தெய்வம்

தண்டிக்க வந்தாலும் மன்னிப்பை

      வேண்டிடுவோம் தருவான்!" என்றாள்.

  யூசுப் :

"மன்னிப்பைப் பெற்றிடலாம் என்கின்ற

      மமதையினால் மனந்து ணிந்து

பண்ணுகின்ற பாபத்தை மன்னிக்க

      இறையவனா பரிவு கொள்வான்?

எண்ணுகின்ற இழிநினைவை இன்றோடு

      விட்டிடுவீர்!" என்று யூசுப்

கண்சிவந்து சுலைகாவைத் தள்ளிவிட்டுக்

      கதவருகில் கடிது சென்றார்!

பருவச் சபலம் :

மூடிய கதவைத் திறந்திட யூசுப்

      முயன்றிடும் போதினில் சுலைகா

ஓடினள், யூசுப் மலரடி வீழ்ந்து

      ஓலமிட் டுருகிட லானாள்!

வாடிய முகத்தை நோக்கிய யூசுப்

      வாலிபச் சிந்தையில் உணர்ச்சி

ஓடிட, உறுதி கலங்கிட உள்ளம்

      ஒப்பிடத் தூண்டின நொடியில்!

 

அன்புடன் சுலைகா எழிலுடல் நோக்கி

      அரைக்கணம் தனைமறந் திருந்தார்.

தன்னருந் தவமே பலித்ததாய்ச் சுலைகா

      தலைநிமிர்ந் தவர்முகம் பார்த்து