பக்கம் எண் :

205


"பெயரிதற்கு எதுவுமுண்டோ?" என்றொருத்தி கேட்கப்

      "பெருமை என்ற பொருளுடைய மா-பழம்என்றிதற்குப்

பெயருளது" எனச்சுலைகா கூறிடவே அவர்கள்

     பிரியமோடு "மா-பழமே, மாம்பழமே!" என்று

பெயருரைத்துத் தங்கள்நாவு இனிக்கவைத்த போதில்

     பேரழகர் யூசுபங்கு தலைகவிழ்ந்து வரவே

"உயரியநற் கனியிதையே கத்தியினா லறுத்து

     ஒப்பிலாத சுவையறிவீர்!" என்றாள்சுலை காவே!

 

தலைநிமிர்ந்து   யூசுபெழில் திருமுகத்தை நோக்கித்

     தமைமறந்து கனிமறந்து விருந்தினரே என்ற

நிலைமறந்து யூசுபிடம் பார்வைதனை நிறுத்தி

     நிகரிலாத அவரழகில் நெஞ்சம்குதித் தாடி

அலையெறிந்து யூசுபினை அவரவருக் கேற்ப

     அதிசயித்து ஆய்ந்தனரே அருட்கவியே போல

நிலைகுலைந்த சுலைகாவும் தன்விழியை யூசுப்

     நெஞ்சினிடைப் பதியவைத்து நினைவு மிழந்தாளே.

 

 

கனியை அறுக்க, கையை நறுக்கினர் :

 

"எழில்நிறைந்த இவரைப்பெற்ற புண்யவதிஎவளோ?"

      என்று தாய்மை அடைந்தமாதர் எண்ணி ஏங்க   

                                      [லானார்.

"விழிநிறைந்த இவர்மனைவி யாகும் பேறு பெற்ற

     வெற்றிபெற்ற பெண்ணெவளோ?" என்று கன்னிப்

                                     [பெண்கள்

விழிசுரந்த துயர்மறைத்து நெஞ்சம்விம்ம லானார்!

     விரும்பியதை மறந்துவிட்ட சுலைகாநினை வுற்று

விழிசுழற்றி அனைவரையும் பார்த்துக் "கத்தி கொண்டு

     விரைவினிலே மாம்பழத்தை வெட்டியுண்பீர்" 

                                      [என்றாள்