பக்கம் எண் :

208


மறைவிருந்து அத்தனையும் பார்த்தசுலை காவின்

மனத்தினிலே தன்கனவின் நினைவெழவே ஏங்கிச்

‘சிறையடைந்த கைதிகளின் கனவின்பயன் கூறும்

திறமடைந்த யூசுபுக்கு என்கனவே பொய்மைக்   

கறையுடைய தாகியதோ?’என நினைக்க லானாள்.

"காவலர்கள் விழித்திடுமுன்போவோ"மெனத் தோழி

உரைத்திடவே மனக்குறையாய்ச் சிறையினைக்கடந்தாள்.

உறங்கியவர் விழித்திடவே கூவியது சேவல்.    

 

கனவு பலித்தது !

 

காலைக்கதிர் கீழ்த்திசையில் கண்விழித்த போது

ககனவெளி எங்கணுமே கனகஒளி வீசச்          

சோலைமலர் சிரித்திடவே, முரசொலியைக் கேட்டுத்

தூக்கிலிடும் சேவகர் சிறையினுள் புகுந்து        

சீலமுயர் யூசுபுள சிறைக்கதவு திறந்து            

திகிலடைந்து கிடந்தவனை இழுத்தேக லானார்.            

வேலிணைத்த கோல்பிடித்த அரசரது வீரன்       

விரைந்துவந்து மற்றவனின் விடுதலையைச்சொன்னான்          .

 

தன்னுடைய விடுதலையை முன்னமே உரைத்த  

தகைமிகுந்த யூசுபினைக் கைதிநோக்கும் போதில்,         

"உன்னுடைய மன்னரிடம் உரைக்கமுடிந் தாலே  

ஒருபிழையும் புரிந்திடாத யூசுப்சிறைக் குள்ளே            

பெண்ணுடைய பெருஞ்சதியால் சிக்கியுள்ள உண்மை

பேசிடுவாய் என்களங்கம் போக்கிடுவாய்!" என்றார்.       

அன்புடைய கைதியவன், "அப்படியே சொல்வேன்;

அஞ்சிடாதீர்!" என்றபடிச் சிறையகன்று சென்றான்.               

 

தன்னுடைய தகுதியையும் கௌரவமும் காக்கத்     

தவறறியா யூசுபைப் சிறையிலிட்ட அமைச்சர்            

புண்ணடைந்த நெஞ்சுடனே பன்னெடுநாள் போக்கிப்  

புத்திபெற்றுக் சுலைகாமனம் திருந்தாதென எண்ணி       

என்னசெய்வ தென்றறியா நிலையினிலே ஆண்டும்   

ஏகவிட்டுத் தன்னிதயம் வேகவைத்து வாழ்ந்தார்.          

தன்னருமைக் காதலரைச் சிறையினிலே பூட்டித்   

தமைப்பிரித்த விதியை நொந்து சுலைகா ஏங்கலானாள்.