பக்கம் எண் :

220


கடமையும் காதலும்

இயல்-43
 

அருகினில் நெருங்கும் பஞ்சம்          

     அகற்றிடத் தானி யங்கள்

பெருக்கிடும் வழியை ஆய்ந்து        

     பெருந்தகை யூசுப் நிற்க

உருகிடும் விழியி னோடு       

     உணர்ச்சியின் வடிவ மாகக்

கருகிடும் மலராய், கண்டோர்        

     கலங்கிடச் சுலைகா வந்தாள் !

 

பன்னெடு நாட்க ளாகப்           

     பார்த்திடா சுலைகா இன்று

தன்னிடம் வருதல் கண்டு              

     தயக்கமில் லாது யூசுப்

"என்னிடம் எதுவும் பேச              

     எண்ணிடில் எனைய ழைத்தால்

நின்னிடம் வருவேன் யானே         

     நேரிலேன் வந்தீர் ?" என்றார் !

      

"உங்களின் ஏவ லாற்ற             

     உயிரினைச் சுமக்கு மென்னைத்

தங்களை ஏவச் சொன்னால்       

     தரணியே நகைத்தி டாதோ ?

திங்களைச் சூழ்ந்த மங்குல்       

     திரையினை விலக்க வேண்டி

உங்களை அடைந்தேன் !" என்றாள்.

     உள்ளமே தவித்தார் யூசுப் !