பக்கம் எண் :

225


"என்னுடைய தந்தையரின் சகோதரியாள்

      எனைவளர்த்து இன்ப முற்று

அன்புகொண்ட காரணத்தால் கள்வனென  

      அறிவித்து அடிமை கொண்டாள் !

என்னுடைய தந்தையர் தம் மெய்யன்பால்

      சோதரர்க்கும் எதிரி யாகி

இன்னலுற்று இங்குவந்தும் சுலைகாவின்

      பேரன்பால் இழிவுற் றேனே !

 

கறைபெற்ற வாழ்வுபெறக் கருதாமல்  

      சுலைகாவின் கண்ப டாமல்

சிறைபட்டு வாழ்ந்தஎனை முறைகெட்ட

      தீயவனாய்ச் செப்பக் கேட்டுத்

திரையிட்ட என்தூய்மை மெய்ப்பிக்க

      விடுதலையைத் தேடிப் பெற்றுக்

குறைபட்ட சுலைகாவின் முறையீட்டுக்

      குள்ளானேன் கோவே !" என்றார்.

 

"மற்றவரின் மனைவியரைப் பெற்றெடுத்த     

      மாதாவாய் மதிக்கும் உள்ளம்

பெற்றதினால் பேரழகி சுலைகாவின்  

      பிடியில்விழாப் பேறு பெற்றேன்!

கற்றதனால் வெற்றிபெற இயலாத    

      உடலுணர்வைக் கடவுள் அச்சம்

பற்றியதால் முற்றுமதை வெற்றிபெற   

      இயன்றதெனப் பகர்வேன் மன்னா !"

 

"நிலையற்ற உலகினிலே நிலைபெற்று      

      வாழ்ந்திடவே நினைத்தல் போன்று

நிலையற்ற அழகினிலே மயக்குற்று   

      நேர்மையினை நீக்கி டாமல்