பக்கம் எண் :

226


விலைமிக்க வாய்மைதனைத் தலைதந்தும்

      காத்திடவே விருப்ப முற்றேன்;

அலைமிக்க நெஞ்சினுக்கு அணைகட்டி

      நெறிகாத்தேன் அரசே!" என்றார்.

   

மன்னர் வேண்டுதல்  

சத்தியமே தவறாத தன்னமைச்சர்    

      யூசுபின் தகைசேர் வார்த்தை

அத்தனையும் செவியேற்ற பேரரசர்  

      வியப்புற்று அருகில் சென்று

"இத்தனைக்கும் தளராது எண்ணத்தைச்      

      சிதைக்காத இதயம் பெற்ற

உத்தமரே யானொன்று உரைத்திடுவேன்

      சுலைகாவை உவப்பீர்!" என்றார்.

 

"மனமற்ற ஆண்பெண்கள் மணம் பெற்றால்    

      பிணம்போன்று வாழ நேரும்;

மனமற்ற கன்னியரில் மனமொத்த        

      விதவையரே மேன்மை யாகும்!

மணமொப்பும் காதலரின் மணம்தந்த    

      இல்லறமே மணக்க லாகும்

குணமிக்க என்னமைச்ச! சுலைகாவை   

      மணம்செய்து கொள்வீர்!" என்றார்.  

சுலைகாவின் நாணம்

இருமணமும் ஒரும ணப்புற்ற

      திருமணத்தின் ஏற்றம் சாற்றிப்

பெருமனமாய்த் தனக்குதவும் பேரரசர்   

     வார்த்தையினைப் பெரிதும் போற்றி