‘பெண்ணுக்குப் பிழை செய்த பெரும் பாவம் தனை எண்ணிப் பேச்ச டைத்துக் கண்ணுக்கு விருந்தாக நிற்கின்ற தெதற்காக......?’ -என்றும் என்றைக்கு நின் விழியில் பட்டேனோ அன்றைக்கே எனையழித்துச் சென்றிட்ட நீ எதற்கே இன்றைக்கு என்னில்லம் திரும்ப வேண்டும்?’ என்றும் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் கேட்கும் சுலைகா, தான் எப்படி இருந்தவள் எப்படியாகி விட்டேன் என்பதை விளக்கிக் கூறுகையில்: "மணங்கவரும் ரோஜாவாய் மணந்த எனை ஏக்கத்தால் மஞ்சள் பூத்தப் பிணமாக்கிப் பூவரசம் பூவாக்கும் ஆசைநோய் பிடிக்கச் செய்து குணமாக்கும் அருமருந்தும் கொண்டோடி மறைந்திட்ட கூற்றுவா!..." என்றழைக்கிறார். ஒரு பெண் எத்துணை அழகுடையவளாயினும்-என்னதான் அந்தஸ்துடையவளாயினும் ஒரு ஆணின் கைப்பிடிக்கும்போதுதான் அவள் பெருமை சிறக்கும் என்பதை "பிறந்திடும் கொடியி லிருந்திடும் மலர்கள் பெருமையே பெற்றிடா துதிரும் பிறந்திடும் மனையி லிருந்திடும் பெண்ணும் பிறவியின் பெருமையை இழப்பாள் பிறப்பிட மன்றி புகுமிடம் சிறப்புப் பெற்றிடும் மலர்களே பெண்கள்!..." -என்று எவ்வளவு ஆழகாக எடுத்துக் காட்டி விடுகிறார் கவிஞர். வாதத் திறமையினால் தம் கட்சியை நிலை நிறுத்த முயலும்தேர்ந்த வழக்கறிஞர்களைப் போல யூசுபும்-சுலைகாவும் வாதிடும் பாடல்களைத் திரும்பத் திரும்பப் படிக்க |