பக்கம் எண் :

247


கொற்றமும், குடிகளும்!

  இயல் 48

அரசவை கூடும் செய்தி

      அனைவரும் அறியச் செய்யும்

முரசமே ஒலிக்கக் கேட்டு          

      முதியவர் இளையோ ரெல்லாம்

விரைந்தனர் அரண் மனைக்கே      

      வீரர்கள் காவல் செய்ய   

அரசரும் அமைச்ச ரோடு          

      அவையினுள் நுழைய லானார்!

 

‘வாழிய மன்னர் கொற்றம்,             

      வாழிய அமைச்சர்!’ என்று

ஆழியின் அலையாய் மக்கள்      

      ஆர்த்தனர், அமைச்சர் யூசுப்

‘சூழிய அமைதி!’ என்று            

      சொன்னதும், கூடி நின்றோர்

‘வாழிநீர் வாழி!’ என்று             

      வாழ்த்தியே அமைதி கொண்டார்.

 

கொற்றவர் அவையைக் கூர்ந்து c   

      குழுமியோர் உள்ளம் ஆய்ந்து

"குற்றமோ குறையோ ஏதும்            

      கூறுவோ ரெவரும் இங்கு

சற்றுமே தயக்க மின்றிச்           

      சாற்றலாம்!" என்றார், மக்கள்

முற்றிலும் மவுனம் கொள்ள        

      முப்புரம் கூர்ந்தார் யூசுப்