பக்கம் எண் :

25


நூலைக் கையில் எடுத்தவரை அதை முடிக்காமல் கீழே வைக்க அனுமதிக்க மாட்டா. இத்தகைய சிறந்த காப்பியம் 1957ஆம் ஆண்டில் முதன்முறையாக வெளிவந்தபிறகு  அதன்   மூன்றாம்   பதிப்பு   வெளியாவதற்கு   இருபது ஆண்டுகள்  செல்ல  வேண்டியிருந்தது  என்பது  ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுப்பதாகும்.

    யூசுப்-சுலைகா என்ற பெயரைப் பார்த்து விட்டு ஏதோ இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என யாரும் எண்ணிவிடக் கூடாது.

இது மொழியால் தமிழ்க் காப்பியம்,

உணர்ச்சியினால் காதற் காப்பியம்,

பண்பினால் மனிதக் காப்பியம்,

போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

  இத்தகையக்      காப்பியத்தை     ஆக்கித்தந்த    கவிஞர்   திலகம்சாரணபாஸ்கரனாருக்கு  என்  பாராட்டுகளைத்  தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்பு மிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மயிலாப்பூர்
சென்னை
27-3-1976

 

மு. மு. இஸ்மா