பக்கம் எண் :

250


"பொல்லாத பஞ்ச காலம்              

      பொய்த்தது என்றால், மக்கள்

எல்லார்க்கும் நன்மை என்றே             

      இறைவனைத் துதிப்போம்; அன்றி

கொல்லாது கொல்லும் பஞ்சம்   

      குறித்தது போன்று வந்தால்

எல்லாரும் அழிவோ!" மென்று

      இயம்பினார் அமைச்சர் யூசுப்.

 

"இளமையை இழந்தால், நம்மை   

      எய்திடும் முதுமை; நாட்டின்

வளத்தினை இழந்தோ மாயின்.  

      வாழ்க்கையே இழிந்து போகும்!

உளத்தினில் உறுதி சேர்த்து     

      உண்பதைக் குறைத்துப், பஞ்ச

களத்தினில் நிமிர்ந்து நிற்கக்    

      கடுமையாய் உழைப்போம்!’ என்றார்.

 

"இருக்கின்ற உணவுப் பண்டம்     

      எல்லாமும் அரசுக் கீந்து

தருகின்ற உணவால் நம்மைத்    

      தகித்திடும் பசியைத் தீர்த்தால்

வருகின்ற பஞ்ச கால            

      வறட்சியை வெல்லும் ஆற்றல்

பெருகிடும்!" என்றார் யூசுப்,    

      பேச்சின்றி ஏற்றார் மக்கள்.

- - x - -