தமிழ்நாடு தமிழ்ப் புலவர் மன்ற ஸ்தாபகரும் அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக - ஆராய்ச்சிக் குழு உறுப்பினருமான முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எழுதியது ‘படித்தேன்!’ அறிஞர் பாரதிதாசன் கவிதைகளை முன்பொரு முறை படித்தேன். இன்று படித்த அன்பர் சாரண பாஸ்கரன் கவிதைகள் எந்த விதத்திலும் அதற்குக் குறைந்ததல்ல என அறிந்தேன். ‘யூசுப் சுலைகா’ என்ற நூலை நான் படித்தேன். ஆம்! அது படித் தேன். கதைக்காக ஒரு முறை, கவிதைக்காக ஒருமுறை- கருத்துக்காக ஒருமுறை, கற்பனைக்காக ஒருமுறை- உவமைக்காக ஒருமுறை படித்தேன். அது ஒவ்வொரு முறையும் ‘படித் தேன்’ என ருசித்தது. தமிழக மக்கள் இவ் உயர்ந்த காவியத்தைப் படித்துப் பயனடைய வேண்டும் என விரும்புகின்றேன். திருச்சி 8 தி. வ. ஆண்டு 1992 பங்குனி 19 | தங்களன்பிற்குரிய கி. ஆ. பெ. வ | |