முதிர்ந்து பழுத்த நெற்கதிரின் முழுமை கண்டு முகம் மலர்ந்தே உதிர்ந்து விழுமுன் அறுவடைக்கு உரிய நேரம் பார்த்தி ருந்தார்! சிதைந்து சேர்ந்த கருமேகம் சீறிச் சினந்துத் ழு தன்காலால் மிதித்துச் சென்றது நெற்பயிரை மிரண்டே கதறினர் உழவர்களே! விதியின் கரத்தை முறித் திடவே விளைவைப் பெருக்கும் வித்தையினை மதியின் பலத்தால் செய்தவர்கள் மழையின் பலத்தால் நசுங்கியதை நிதியின் பலத்தால் நிமிர்த் திடவே நினைத்த மன்னர் யூசுபிடம் சதியில் தேர்ந்த விதிக் கொடுமை தவிர்க்கும் வழியே வேண்டிட்டார். "பசுவைப் பசுவே உண்பதுபோல் பார்த்தக் கனவை மறவாமல் சிசுவைக் காக்கும் தாய்போலச் செழுமை திரும்பும் வரையினிலும் இசைவாய் மக்கள் இயங்குவரேல் எல்லாத் துயரும் வென்றிடவே விசையாய் உழைப்போம்!" எனயூசுப் வேந்தரை நிமிர்ந்தே கூர்ந் திட்டார்! "அறுவடை காணும் வேளையினில் அழிந்ததை மீட்கும் முயற்சியெனக் குறுகிய காலப் பயிர் விதையைக் கொடுத்தே மீண்டும் விவசாயம் பெருகிடச் செய்வோம்!" எனமன்னர் பெருமூச் சிடையே கூறியதும் ‘வருந்திடச் செய்யும் முயற்சி!’யென மறுத்தே யூசுப் உரைத்தாரே! ழு மேகத்தின் கால்கள் - மழைத்தாரைகள் |