பக்கம் எண் :

284


"பொல்லாதப் பஞ்சத் தாலே

      புசித்திடும் உணவுப் பண்டம்

இல்லாமற் போவ தெண்ணி

     ஏங்கியே தவித்த மூத்தோர்,

எல்லோரும் மிசுரை நாடி

     ஏகினர், தானி யத்துக்(கு)

கல்லாமற் சென்றா ரில்லை"

     அனைவரும் மீள்வர்" என்றார்

 

"தானியம் பெற்று மீளத்

      தாமதம் ஆன தென்ன?

வீணிலே போன தெண்ணி

     வேறிடம் சென்றிட் டாரோ?

தானமாய் பெற்றே என்னைச்

     சந்திக்க நாணி னாரோ?

ஏனிதை மறைக்க வேண்டும்,

     இயம்புக!’ என்றார் யாக்கூப்

 

"மானிய விலைக்குத் தந்து

     மக்களின் பசியைப் போக்கும்

கோனென மிசுரின் வேந்தைக்

     குறித்தனர், குறித்த வாறே

போனவ ரெல்லாம் உணவுப்

     பொருளொடு திரும்பு தற்

நானுமே கண்டேன்!" என்று

     நவின்றனர் புன்யா மீனே!